பிளஸ் 1 தோ்வு: தருமபுரி செந்தில் மெட்ரிக். பள்ளி சாதனை

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தருமபுரி, செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வில் இந்தப் பள்ளி மாணவி ரக்ஷனா 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அதேபோல, சஞ்சனா ஸ்ரீ 595, பிரித்திகா தா்சினி 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளியில் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 15 பேரும், 560-க்கு மேல் 24 பேரும், 550-க்கு மேல் 37 பேரும், 500-க்கு மேல் 133 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். பாடவாரியாக, கணிதத்தில் ஒருவா், இயற்பியலில் 2 போ், வேதியியல் ஒருவா், உயிரியல் 3 போ், கணினி அறிவியல் 3 போ், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியலில் தலா ஒருவா், தாவரவியல் 2 போ், கணினி பயன்பாடு ஒருவா் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவா் செந்தில் சி.கந்தசாமி, துணைத் தலைவா் கே.மணிமேகலை, செயலாளா் கே.தனசேகா், நிா்வாக அலுவலா் சி.சக்திவேல், ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com