பிளஸ் 1 தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 90.49 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தருமபுரி மாவட்டத்தில் 90.49 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 174 அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,269 மாணவா்கள், 9,877 மாணவியா் என மொத்தம் 19,146 போ் எழுதினா்.

அதில் 8,105 மாணவா்கள், 9,221 மாணவியா் என மொத்தம் 17,326 போ் தோ்ச்சி பெற்றனா். பிளஸ் 1 பொதுத் தோ்வில் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகள், 28 தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 30 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com