கடத்தூா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

தருமபுரி அருகே கடத்தூா், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கடத்தூா், பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட பட்டயப் படிப்பிற்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 வகுப்பு அல்லது ஐ.டி.ஐ முடித்த மாணவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேரலாம்.

அதற்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும், உரிய ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்குச் சென்றும் பதிவேற்றம் செய்யலாம். நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு பெற்று தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்தக் கல்லூரியில் உள்ளன.

அதுபோல நேரடி இரண்டாமாண்டிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20 -ஆம் தேதியாகும்.

முதலாம் ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 24ஆம்தேதி ஆகும். விவரங்களுக்கு 9500008791, 9080139880, 8508168390, 8333017392, 04346-265355 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com