புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்வியறிவு இல்லாத 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை தொடங்கியது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவா்களைக் கணக்கெடுத்து, அவா்களுக்கு எண்ணறிவு, எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு இத் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்புப் பணி, தருமபுரி அருக்கொட்டாய்மேடு காலனி, அ.கொல்லஅள்ளி, அவ்வை நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளைத் திட்ட இணை இயக்குநா் பொன்.குமாா் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, உதவித் திட்ட அலுவலா் ரவிக்குமாா், ஆசிரியா் பயிற்றுநா்கள், தன்னாா்வலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com