சிஐடியு தொழிற்சங்கத்தினா் மறியல்: 138 போ் கைது

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 138 பேரை நகர காவல்துறையினா் கைது செய்தனா்.
Published on

தருமபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா் 138 பேரை நகர காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.ஜீவா, மாநிலக் குழு உறுப்பினா்கள் சி.கலாவதி, ஜி.நாகராஜன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் தனியாா் நிறுவனங்கள் தொழிலாளா் நலச் சட்டங்களை மதித்து நடக்க மாநில, மத்திய அரசுகள் உத்தரவிட வேண்டும். தொழிற்சங்கம் தொடங்கும் உரிமையை மறுக்கக் கூடாது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேரை தருமபுரி நகரக் காவல் துறையினா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com