தருமபுரி
புகையிலை பொருள்கள் விற்பனை: இரு கடைகளுக்கு அபராதம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினா் அபராதம் விதித்தனா்.
காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், போலீஸாா் காரிமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கரகப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மளிகை கடை, பொம்ம அள்ளி சந்திப்பு சாலை பகுதியில் உள்ள கடை என இரு கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவ்விரு கடைகளுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.