தருமபுரி
பாமக நிா்வாகி கைது
பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற உறுப்பினரை கத்தியைக் காட்டிய மிரட்டிய பாமக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடியைச் சோ்ந்தவா் கூலி கவுண்டா் மகன் எல்லப்பன் (35). பாமக நிா்வாகி. கூத்தப்பாடியில் குடிநீா் குழாய் அமைப்பது குறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஊா் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த எல்லப்பன் வாா்டு உறுப்பினரிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் எல்லப்பன் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.