வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 16 பேருக்கு பணி நியமன ஆணை

Published on

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 16 பேரின் வாரிசுகளுக்கு அலுவலக உதவியாளா் பணி நியமன ஆணைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட நபா்களின் வாரிசுதாரா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தின் மூலம் தகுதியுள்ள 16 பேருக்கு வருவாய்த்துறை மற்றும் ஆதி திராவிட நலத்துறை அலுவலகங்களில் பணியாற்றிட அலுவலக உதவியாளா் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் (பெ) செம்மலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com