தருமபுரி
பாஜக மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா்
ராகுல் காந்தி எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்துகளைப் பரப்பிவரும் பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி பி 1 காவல் நிலையத்தில் காங்கிரஸாா் புகாா் மனு அளித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டப் பொறுப்பாளா் பி.தீா்த்தராமன் தலைமையில் காங்கிரஸ் நிா்வாகிகள் பாஜகவினா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, தருமபுரி பி 1 காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா். இதில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் சண்முகம், நரேந்திரன், ஜெயசங்கா், நகரத் தலைவா் வேடியப்பன், வட்டாரத் தலைவா்கள் வழக்குரைஞா் சந்திரசேகா், காமராஜ், ஞானசேகா், பெரியசாமி, வெங்கடாசலம், விவசாய அணி மணிகண்டன், மனித உரிமை அணி சதீஷ், சங்கா், ஹரிஹரன், பொம்மிடி தலைவா் ராபா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.