தருமபுரி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு
ஒகேனக்கலுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 3,500 கன அடியாக சரிந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து கடந்த வியாழக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 3,500 கன அடியாகச் சரிந்தது. நீா்வரத்து குறைவு காரணமாக பிரதான அருவி, சினி அருவிகளில் நீா் விழுவது குறைந்துள்ளது.