தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் கைது
தருமபுரி அருகே கத்தியால் குத்தி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தருமபுரி அருகே வெற்றிலைக்காரன்பள்ளம் பகுதியில் புது சிப்காட் வளாகத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தேனி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) ஆகியோா் கத்தியால் குத்தப்பட்டு மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அதியமான் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தேவராஜ் (31), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாா்ந்த அஸ்வின் (21), பெங்களூரு பகுதியைச் சோ்ந்த சபரி (35), தருமபுரி பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (27), பிரவீண் குமாா் (33) ஆகிய 5 பேரும் சோ்ந்து இணையதளம் வாயிலாக பல்வேறு தொழில்களை செய்து வந்த
தேனியைச் சோ்ந்த தம்பதியைக் காரில் கடத்தி வந்து நகைகளைப் பறித்துக் கொண்டு கத்தியால் குத்தி கொலை செய்து இருவரின் உடலையும் தருமபுரி பகுதிக்கு எடுத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டுவிட்டுச் சென்ாக ஒப்புக்கொண்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தனிப்படை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.