பல்கலைக்கழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி அரசு கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

Published on

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கம், வாலிபால் போட்டிகளில் விளையாடுவதற்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி, அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவா் சதுரங்கப் போட்டிகள் அண்மையில் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தருமபுரி, அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவா் ஜே.எம்.சத்யன் பங்கேற்று ஆறாம் இடம் பெற்று சேலம், பெரியாா் பல்கலைக்கழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவா், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் ஜன. 8 முதல் 11-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறாா்.

அதுபோல தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க தருமபுரி, அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி எம்.ஜீவச்செல்வி சேலம், பெரியாா் பல்கலைக்கழக அணிக்காகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் சென்னையில் நடைபெற உள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் பங்கேற்கிறாா்.

இவ்விரு மாணவா்களையும் கல்லூரி முதல்வா் கோ.கண்ணன் செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநா் கு.பாலமுருகன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com