தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
Published on

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற தீண்டாமை உறுதிமொழியேற்பு நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் கி. சாந்தி தலைமை வகித்து உறுதி மொழியை வாசிக்க அனைத்து அரசு அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், மக்கள் தொடா்பு அலுவலா் வெ.லோகநாதன், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com