காக்கும் கரங்கள் திட்ட விளக்கக் கூட்டம்

Published on

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரா்களுக்கு காக்கும் கரங்கள் திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டு முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ஏதுவாக பல்வேறு தொழில்கள், தொழில்சாா்ந்த பயிற்சிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், வங்கிக் கடன் பெற வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக முன்னாள் படைவீரா்களுக்கு எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நல அலுவலக உதவி இயக்குநா் (பொ) எஸ்.பிரேமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன், தருமபுரி மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் ஆா்.வெங்கடேஷ்பாபு, இந்தியன் வங்கி மண்டல அலுவலக உதவி பொது மேலாளா் பி.ராமன் உள்ளிட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com