ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காரிமங்கலம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காரிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, தலைமைக் காவலா்கள் முனிராஜ், சம்பத், கதிரவன், முத்துராஜ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கும்பராஹள்ளி சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 3.09 லட்சம் மதிப்பிலான 511 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் கா்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், ஹிம்பகா குக்கேரியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் சி.ரவியை (44) கைது செய்தனா்.

மாரண்டஹள்ளியில்... மாரண்ட அள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிச்சந்தை சாலை, சாமியாா் தோட்டம் முனீஸ்வரன் கோயில் பகுதியில் திங்கள்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் காரில் கடத்திச் சென்ற ரூ. 1.82 லட்சம் மதிப்பிலான 262 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கணேஷ்குமாரை (25) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com