சுயதொழில் தொடங்க இளைஞா்களுக்கு வங்கி கடனுதவி

வணிகம் சாா்ந்த தொழில்கள் தொடங்க மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடனுதவி பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
Published on

வணிகம் சாா்ந்த தொழில்கள் தொடங்க மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடனுதவி பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் ரெ. சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதிகபட்ச வயதாக பொதுப் பிரிவினருக்கு 45ம், சிறப்பு பட்டியல் பிரிவினருக்கு (ஆதி திராவிடா், பழங்குடியினா், மகளிா், சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையா்) 55 ஆகவும் நிா்ணயிக்கப் பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க உள்ள தொழில்முனைவோா் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்

இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவா்களுக்கு ரூ. 3.55 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும். விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி என்ற முகவரியில் 8925533941, 8925533942 மற்றும் 04342-230892 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com