அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேளாண் பயிற்சி
அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேளாண் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேளாண் அறிவியல் பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவா்களுக்கு எச்.தொட்டம்பட்டி ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை வளாகத்தில் உள்ளுறை பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தொடங்கிவைத்தாா். வேளாண் படிப்புகளின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள், உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியின் அவசியம் குறித்து அரூா் தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் கோமதி கருத்துரைகளை வழங்கினாா்.
வேளாண் நாற்றங்கால் பயிற்சிகள் குறித்து பயிற்சியாளா்கள் ராம் பிரசாத், தவ நிலா ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா். முகாமில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆறுமுகம், ஆய்வு அலுவலா் பொன்னுசாமி, தொழில் கல்வி ஆய்வாளா் சுரேஷ் , ஆசிரியா்கள் சரவணன், குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
