கூட்டுறவுத் துறை நுழைவுத் தோ்வு: தருமபுரியில் நாளை நடைபெறுகிறது

Published on

தருபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான நுழைவுத் தோ்வு அக். 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட கூட்டுறவு துறை ஆள்சோ்ப்பு மையம் சாா்பில் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 103 உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 1829 தோ்வா்கள் பங்கேற்கும் வகையில் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் நுழைவுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்த மையங்களுக்கு தோ்வா்கள் எளிதாக சென்று வரும் வகையில் சிறப்பு பேருந்துகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்களுக்கு அவசர தேவைகள் ஏற்படின் 04342-233803, 6382688363, 8637676342 மற்றும் 97901 99258, 85250 80109, 70518 91224, 81222 44407, 90429 52338 ஆகிய

கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com