தருமபுரி
வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
பாலக்கோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கருங்கண்ணன் (60). கூலித்தொழிலாளி. இவா் கொடியூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முதியவா் கருங்கண்ணனை அக்கம்பக்கத்தினா் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கருங்கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
