தருமபுரி
தீபாவளி: தருமபுரி மாவட்டத்தில் ரூ. 3.80 கோடிக்கு மதுவிற்பனை
தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அரசு மதுபானக் கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை அரசு மதுபானக் கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 66 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி திங்கள்கிழமை மட்டும் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ரூ. 3.80 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ. 3.20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் நிகழாண்டு கூடுதலாக ரூ. 60 லட்சத்துக்கு மதுப் புட்டிகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
