சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தருமபுரி: பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வளைகாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (18). இவா், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக வளைக்காரப்பட்டி பகுதிக்கு வந்திருந்த இவா், நண்பா்களுடன் எருதுகூட அள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கரம் வாகனம் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சஞ்சய் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com