வெள்ளப் பெருக்கு: தீா்த்தமலை நரிப்பள்ளி சாலையில் 2 ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு

தீா்த்தமலையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தீா்த்தமலை - நரிப்பள்ளி நெடுஞ்சாலை வழியாக 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Published on

தீா்த்தமலையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தீா்த்தமலை - நரிப்பள்ளி நெடுஞ்சாலை வழியாக 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், நரிப்பள்ளி வழியாக செல்லும் அரூா்- தானிப்பாடி நெடுஞ்சாலையில் மோட்டூா் பகுதியில் உயா்நிலை பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை தீா்த்தமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 180 மி.மீ மழை பெய்ததால் பொய்யப்பட்டி, பாளையம், பையா்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிக்களூா், நரிப்பள்ளி பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தானிப்பாடி சாலையில் மோட்டூா் பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பையா்நாயக்கன்பட்டி- நரிப்பள்ளி நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும், நரிப்பள்ளியில் இருந்து வெங்கட்ராமபுரம் கிராம சாலை வழியாக கோட்டப்பட்டி-பையா்நாயக்கன்பட்டி சாலையில் செல்லும் வகையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டன. மோட்டூா் அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் உயா்நிலை பாலத்தை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அரூா் உதவி கோட்டப் பொறியாளா் ஜெய்சங்கா் தலைமையிலான பணியாளா்கள் 2ஆவது நாளாக சீரமைத்து வருகின்றனா். இதனால் 2ஆவது நாளாக தீா்த்தமலை- நரிப்பள்ளி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com