Enable Javscript for better performance
பெங்களூர் நிதி நிறுவன அதிபரைக் கொலை  செய்து தமிழக வனத்தில் புதைத்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூர் நிதி நிறுவன அதிபரைக் கொலை  செய்து தமிழக வனத்தில் புதைத்தவர் கைது

    By  ஒசூர்  |   Published on : 11th July 2013 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூர் நிதி நிறுவன அதிபரைக் கொலை செய்து தமிழக வனப் பகுதியில் புதைத்தவரை பெங்களூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     பெங்களூர் எச்எஸ்ஆர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராம ரெட்டி (48). இவர் அந்தப் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்தார்.
     இவரிடம், ரூ. 50 ஆயிரம் வாங்கிய அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டி அசலையும், வட்டியையும் கொடுக்கவில்லையாம்.
     இதுகுறித்து கடந்த மாதம் 30ஆம் தேதி ராஜசேகர் ரெட்டியிடம் கோதண்டராமரெட்டி செல்போனில் பேசினாராம்.
     இதையடுத்து, நேரில் சென்ற கோதண்டராமரெட்டியிடம் ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்தாராம். மீதிப் பணத்தைக் கேட்ட போது, ஏற்பட்ட தகராறில் ராஜசேகர் ரெட்டி நாற்காலியால் தாக்கியதில் கோண்டராமரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இதையடுத்து, அவரது சடலத்தை காரில் எடுத்து வந்து தமிழக வனப் பகுதியான பேரண்டப்பள்ளி காட்டில் புதைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
     இதற்கிடையே, கோதண்டராம்ரெட்டியைக் காணவில்லை என அவரது மகன் ராமன் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜசேகர் ரெட்டியிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
     சடலத்தை புதைத்த பேரண்டப்பள்ளி காட்டுக்கு அவரை புதன்கிழமை அழைத்து வந்த கர்நாடக போலீஸார், சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
     பின்னர், உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
     ராஜசேகர் ரெட்டியை கைது செய்த பெங்களூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai