Enable Javscript for better performance
ஓட்டுநரைக் கொன்று லாரி கடத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே லாரி ஓட்டுநரைக் கொலை செய்து, இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள வீரசெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (27). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக லாரி வாங்கினாராம். பெங்களூரிலிருந்து லாரியில் இரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கந்திலிக்குப்பம் அருகே ரவிக்குமார் வந்தார்.

    அப்போது, மர்ம நபர்கள் லாரியை வழி மறித்து, அவரை லாரியில் இருந்து கீழே இறக்கிவிட்டு கொலை செய்ததுடன் லாரியைக் கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai