Enable Javscript for better performance
தலைவர்- துணைத் தலைவர் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் தலைவர் மீது புகார் கூறிய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியக் கூட்டம் அதன் தலைவர் முனியப்பா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தலைவர் முனியப்பாவும், துணைத் தலைவர் ராமமூர்த்தியும் மற்றும் 13 உறுப்பினர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் திமுக, தேமுதிகவைச் சேர்ந்தவர்கள்.

    கூட்டம் தொடங்கிவுடன் துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைவர் முனியப்பா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தலைவர் தனிச்சையாக செயல்படுகிறார். ஒப்பந்தப்புள்ளிகளை ஒளிவு மறைவின்றிவிட வேண்டும். அவருக்குத் தேவையான நபர்களுக்கு மட்டும் பணிகளை விடுகிறார் எனப் புகார் கூறி, துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அதிமுக 13 உறுப்பினர்கள் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பிறகு, தீர்மான நகலை கிழித்து விட்டு உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதுதொடர்பாக துணைத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் கூறியது:

    தலைவர் முனியப்பா தனிச்சையாக செயல்படுவதை அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் தெரிவித்து, அவர் மீது

    நடவடிக்கை எடுக்குமாறு

    கூறுவோம் எனறனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai