Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் இளவரசன் படத்துடன் வைத்திருந்த பேனர்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் இளவரசன் படத்துடன் வைத்திருந்த பேனர்கள் அகற்றம்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 13th July 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி நகரில் இளவரசனுக்கு அஞ்சலி தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் போலீஸாரால் அகற்றப்பட்டது.

    தர்மபுரியில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் அண்மையில் உயிரிழந்தார்.

     இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகரில் பெங்களூர் சாலையில் அனுமதியின்றி இளவரசன் படத்துடன் அஞ்சலி தெரிவித்து ஒரு குறிப்பட்ட அமைப்பினரால் பேனர் வைக்கப்பட்டிருந்தது.  இது குறித்து, போகனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், அளித்த புகாரின் பேரில், நகர போலீஸார் வியாழக்கிழமை இரவு, கிருஷ்ணகிரி பழையபேட்டை, பயணியர் மாளிகை பிரிவு சாலை அருகே அம்பேத்கார் கூட்டமைப்பு என்கிற பெயரில், இளவரசன் படத்துடன் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றினர்.

     மேலும், பேனர் வைத்த அமைப்பு சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai