Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 13th July 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் வட்டத்தில் 5 புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி வட்டத்தில், ஜாகீர் வெங்கடாபுரம் கிராமப்பகுதியை சேர்ந்த 760 குடும்ப அட்டைகள் மற்றும் லைன்கொல்லை கிராமப் பகுதியை சேர்ந்த 270 குடும்ப அட்டைகள் உள்பட மொத்தம் 1030 குடும்ப அட்டைகள் இருந்தது. இந்த கடையினை பிரித்து லைன்கொல்லை கிராமத்தில் ஒரு பகுதி நேர நியாய விலைக்கடை துவங்கப்பட்டது. இந்த கடை வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரண்டு நாள்கள் செயல்படும்.

     இதேபோல, அவதானப்பட்டி முழு நேர நியாய விலைக்கடையினை பிரித்து 

     தாசன் கொட்டாய் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை வாரத்தில் சனிக்கிழமை மட்டும் செயல்படும் வகையில் துவங்கப்பட்டது.

    இதே போல, ஒசூர் வட்டத்தில் பாகலூர் முழுநேர நியாயவிலைக்கடையை பிரித்து வெங்கடராயபுரம் கிராமப் பகுதியில் பகுதி நேரக்கடை துவக்கப்பட்டது. இந்த கடை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் செயல்படும்.

     தின்னப்பள்ளி முழுநேர நியாயவிலை கடையை பிரித்து, பட்டுவாரப்பள்ளியில் பகுதி நேரக்கடை திறக்கப்பட்டது. தாசிரிப்பள்ளியில் செயல்பட்டு வந்த கடையை பிரித்து, ஈச்சாங்கூரில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் செயல்படும் வகையில் பகுதி நேர நியாய விலைக்கடை துவக்கப்பட்டது.

    இந்த பகுதி நேர நியாய விலைக்கடைகளை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து பேசியது: அத்தியாவசிய பொருள்களை வாங்கிட இந்த கிராம மக்கள் 2 கி.மீ அல்லது 3 கி.மீ சென்று வாங்க வேண்டிய நிலைமையை மாற்றி பகுதி நேர நியாயவிலைக்கடை வழங்கி வாரத்திற்கு இரண்டு நாள் மற்றும் ஒரு நாள் செயல்படும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. விலையில்லா அரிசி வழங்குவதற்கு தமிழக அரசு ஆண்டு ஒன்றுக்கு ரூ.4900 கோடி செலவிடுகிறது. கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில்  பகுதி நேர நியாய விலைக்கடைகளை உருவாக்குவது தமிழக முதல்வரின் நோக்கமாகும். மேலும், கிராமப்புறங்களில் தாய் திட்டம் செயல்படுத்துவதன் மூலமே ஆண்டுக்கு ரூ.250 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது. பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செனற நிலை மாற்றி அதிகாரிகள் கிராமப் பகுதிகளுக்கு பொது மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும்சென்று அம்மா திட்டம் செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம், ஒசூர் சார்-ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கே.அசோக்குமார், ஒன்றியக் குழுத்தலைவர்கள் சி.கோவிந்தராஜ், புஷ்பாசர்வேஷ், ஜமுனாகிருஷ்ணன், ஒசூர் நகர மன்றத் தலைவர் பி.பாலகிருஷ்ணரெட்டி, வட்ட வழங்கல் அலுவலர்கள் விஜயராகவன், பாலு, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai