Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தொலை தொடர்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து

    கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். எஸ்என்இஏ கிளைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கிளை செயலர் கண்ணன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில், தொலை தொடர்புத்துறையில் 100 சதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். தந்தி சேவையை நிறுத்தக்கூடாது. ஊழியர் விரோத போக்கை மத்திய கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

    இதில், எஸ்என்இஏ கிளை செயலாளர் மகேஷ்குமார், பிஎஸ்என்எல்யு மாவட்ட உதவி செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai