Enable Javscript for better performance
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது: ரூ.11 லட்சம் மதிப்பிலான 46 பவுன் நகை பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது: ரூ.11 லட்சம் மதிப்பிலான 46 பவுன் நகை பறிமுதல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 13th July 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகரம், வட்டார காவல் நிலையம், ஒசூர், ஹட்கோ, தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் பாகலூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மையில் பெண்களிடம் தாலிச்செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க, கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் ம.சந்தானபாண்டின் தலைமையில், வட்டார காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்திரவிட்டார்.

    தனிப்படை போலீஸார், கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த இளைஞரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருமால்(26) என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வழிப்பறியில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

     இதையடுத்து திருமாலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 46 12 பவுன் தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai