Enable Javscript for better performance
ஒசூரில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை விரட்டும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை விரட்டும் பணி தீவிரம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 14th July 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சுற்றித் திரியும் ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கர்நாடகத்தில் மாலூரில் இருந்த யானைக் கூட்டத்தில் இருந்து ஒற்றை யானை பிரிந்தது. இந்த யானை ஒசூர் நகர் அருகிலுள்ள பேரண்டப்பள்ளி வனப் பகுதியை ஒட்டியுள்ள தனியார் தொழில்சாலையில் கடந்த 8-ஆம் தேதி நுழைந்தது.

    மேலும், தொழில்சாலையின் அருகே இருந்த தனியார் பள்ளி வளாகத்திலும் நுழைந்தது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இரண்டு நாள்களாக விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில், யானை தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டுள்ளது.

    இந்த யானையை அருகிலுள்ள வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் 5-ஆம் நாளாக சனிக்கிழமை இரவு, மாவட்ட வன அலுவலர் உலகநாதன் தலைமையில் வனச் சரகர் பழனிச்சாமி மற்றும் வனத் துறையினர் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai