Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் நீதிமன்ற பணியாளர்களுக்கு பயிற்சி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 14th July 2013 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி சார்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சார்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், நகல் பரிசோதகர், நகல் படிப்பாளர் ஆகியோருக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி சம்பத், முதன்மைக் குற்றவியல் நடுவர் தமிழரசன் ஆகியோர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில், உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் கையேடுகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், இந்தப் பயிற்சி முகாமில், வழக்கு கோப்புகளை பராமரித்தல், கோப்பைக் கையாளுதல், தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணையை எவ்வாறு தட்டச்சு செய்வது மற்றும் நகல் பிரிவில் எவ்வாறு பதிவேடுகள் பராமரிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்தப் பயிற்சியை முதன்மை சார்பு நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், சிறப்பு சார்பு நீதிபதி அசோகர், கூடுதல் சிறப்பு நீதிபதி சுபத்திராதேவி ஆகியோர் அளித்தனர்.

    இதில், 100-க்கும் மேற்பட்டப் பணியாளர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai