Enable Javscript for better performance
கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 14th July 2013 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டால் கடந்த ஒரு ஆண்டாக சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி இழப்பு ஏற்பட்டு, பல குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலை மாறிட, மின் உற்பத்தி கிடைத்தால் தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். தற்போது கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்க நல்ல சூழல் உருவாகியுள்ளது. விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும். அவ்வாறு, உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்து மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் தமிழகத்திற்கு அதிகளவு மின்சாரம் கிடைக்கும். கூடங்குளத்தில் உள்ளவர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் வழங்கிட உத்திரவாதப்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தின் நலன் கருதி கூடங்குளம் எதிர்ப்பாளர்கள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார் அமைச்சர்.

    இந்த பேட்டியின் போது, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.கோபிநாத், முன்னாள் எம்பி தீர்த்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai