Enable Javscript for better performance
வழக்குரைஞர் பாலு வீட்டை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர் பாலு வீட்டை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 14th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் வழக்குரைஞர் பாலு வீட்டை தாக்கிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட பாமக சட்ட பாதுகாப்பு அணி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து பாமக சட்டப்பாதுகாப்பு அணியின் மாநில துணை செயலாளரான கிருஷ்ணகிரி வழக்குரைஞர் இளங்கோ சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: சென்னையில் கடந்த 11-ஆம் தேதி இரவு சமூக நீதி பேரவை தலைவரும், சட்ட பாதுகாப்பு ஆசிரியருமாகிய வழக்குரைஞர் பாலுவை கொலை செய்யும் முயற்சியில், அவரது வீட்டையும், காரையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

     மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல பொதுநல வழக்குகளையும், அவர்களின் நலனை பேணும் வகையில் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் இருக்ககூடாது என்பது போன்ற வழக்குகளையும் நடத்தி வருகிறார்.

     இதை ஏற்றுக்கொள்ளாத சமூக விரோதிகள் அவரின் உடமைகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, வழக்குரைஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை கிருஷ்ணகிரி மாவட்ட பாமக சட்ட பாதுகாப்பு அணி சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    =

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai