Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 15th July 2013 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    முதல்போக சாகுபடிக்காக கிருஷ்ணகிரி அணையிலிருந்து ஜூலை 14ஆம் தேதியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் தமிழக முதல்வர் அறிவித்தார்.

    இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்களில் அமைச்சர் கே.பி.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை தண்ணீரை திறந்து விட்டார்.

    52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. அணை இடது புறக்கால்வாயில் நொடிக்கு 80 கன அடியும், வலதுபுறக் கால்வாயில் நொடிக்கு 75 கன அடி என மொத்தம் 155 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்தக் கால்வாய்கள், 26 சிறுபாசன ஏரிகள் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர்  மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செüட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

    மேலும், இந்த தண்ணீர் 11.12.2013 வரை தொடர்ந்து 150 நாள்களுக்கு பாசனத்துக்காக திறந்துவிடும். அதைத்தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நாள்கள் நீடிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியது:

    தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இந்தத் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூலைப் பெற வேண்டும். அதேபோல, நீர் பங்கீட்டுப் பணிகளில் பொதுப் பணித் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம்,  எம்எல்ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஜகநாதன், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கோவிந்தராஜ், ஜமுனா கிருஷ்ணன், நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai