Enable Javscript for better performance
ஜேடுகொத்தூர் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ஜேடுகொத்தூர் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 15th July 2013 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஜேடுகொத்தூர் கிராமத்தில் உள்ள முனிகானப்பள்ளி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜேடுகொத்தூரில் முனிகானப்பள்ளி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 12-ஆம் தேதி மாலை தொடங்கியது.

    முதல் நாளில் வாஸ்து சாந்தி, வாஸ்து பலி உள்ளிட்டவை நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, 13-ஆம் தேதி கும்ப அலங்காரம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடைபெற்றன. பின்னர், அன்று மாலையில் 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைக்கு பின்னர் மங்களார்த்தி, 108 கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து, மங்கள வாத்தியங்கள் இசைக்க யாகசாலையில் இருந்து கலசம் கோயிலின் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித நீரால் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஜேடுதொத்தூர், சின்னமட்டாரப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai