Enable Javscript for better performance
\\\"தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஒத்துழைப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஒத்துழைப்பு'

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 15th July 2013 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முழு ஒத்துழைப்பு தருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், முதுநிலை ஆசிரியர் கழகம் உறுதி அளித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள ராமசாமியை, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமையில் முதுநிலை ஆசிரியர் கழகத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தனது முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோபி, சட்டச் செயலர் ராஜசேகரன், கல்வி மாவட்ட இணைச் செயலர் வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai