Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

    By  கிருஷ்ணகிரி  |   Published on : 16th July 2013 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமராஜரின் பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
     அவதானபட்டி மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற விழாவிற்கு மாவட்டத் தலைவர் காசிலிங்கம் தலைமை வகித்து, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநிலச் செயலாளர் அக.கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் தசரதன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தங்களை வழங்கினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
     இதில், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் சிவலிங்கம், ஜெயபிரகாஷ், மாவட்டச் செயலாளர் கார்த்திக், நகரத் தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா:
     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
     இதில், கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை சாந்தி தலைமை வகித்தார். இதில், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள் ராவணன், சுதா, ஜமுனா, சுமதி மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
     இதேபோல, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசியர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
     இதே போல, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
     ஒசூரில்... ஒசூர் காமராஜ் காலனியில் காமராஜர் உருவச் சிலைக்கும், அவருடைய உருவப் படத்துக்கும் ஒசூர் நகர, வட்டாரக் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
     முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஏ. மனோகரன், டி.வெங்கட் ரெட்டி, நகரக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சி.தியாகராஜன், வட்டாரத் தலைவர்கள் மஞ்சுநாத், சிவப்பு ரெட்டி, நகர நிர்வாகிகள் நீலகண்டன், ஆட்டோ பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai