Enable Javscript for better performance
ஒசூர் கடைகளில்  திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை - Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் பழைய பெங்களூர் சாலை, காந்தி சாலை, நேதாஜி சாலை ஆகிய வீதிகளில் இரவு நேரங்களில் 5 கடைகளில் பூட்டை உடைத்து, மே மாதம் மர்மநபர் கொள்ளையடித்துச் சென்றார்.

    இதுகுறித்து ஒசூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து, பெங்களூர் லாயர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரகாப் மகன் நசீரை (25) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஒசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்ததது. 5 கடைகளில் திருடிய நசீருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, அதை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai