Enable Javscript for better performance
கும்கி யானை உதவியுடன் ஒற்றை யானையை விரட்ட முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அசோக் லேலண்ட் தொழில்சாலை வளாகம் அருகேயுள்ள தோட்டத்தில் சுற்றி வரும் ஒற்றை யானையை விரட்ட கும்கி யானையைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கேட்டு தமிழக அரசுக்கு ஒசூர் வனத் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    கர்நாடக வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்கு வந்த காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசூர் அசோக் லேலண்ட் தொழில்சாலை அருகேயுள்ள தோட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகுந்தது.

    அங்கு யானைக்குத் தேவையான உணவு, தண்ணீர் இருப்பதால் அது அங்கேயே தங்கிவிட்டது.

    வனத் துறையினர் அந்த யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஒசூர் நகருக்கு மிக அருகில் முகாமிட்டுள்ள இந்த ஒற்றை யானையை, கும்கி யானையை வரவழைத்து விரட்ட வனத் துறையினர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக, தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டு ஒசூர் கோட்ட வன அலுவலர் உலகநாதன் கடிதம் எழுதியுள்ளார்.

    அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததும் கும்கி யானையைக் கொண்டோ, அல்லது ஒற்றை யானைக்கு மயக்க மருந்து கலந்த ஊசியை செலுத்தி, யானை மயக்கமடைந்ததும் லாரியில் தூக்கிச் சென்று அஞ்செட்டி வனப் பகுதியில் கொண்டு விடவும் வனத் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai