Enable Javscript for better performance
கோவையில் ஜூலை 25-இல் மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ஜூலை 25-இல் மண்டல அஞ்சல் குறைதீர் கூட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 17th July 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மண்டல அளவிலான அஞ்சல் துறை குறைதீர் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பால் அதியநாதன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அஞ்சல் துறையின் கோவை மண்டல அளவிலான குறைதீர் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதி மேற்கு மண்டல அலுவலகம், 2-ஆவது தளம், ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் அலுவலக வளாகம், கோவை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

    அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், தங்களது புகார்களை அஞ்சல் அதாலத் வழக்கு என தபால் உறையின் மீது எழுதி வருகிற 20-ஆம் தேதிக்குள் உதவி அஞ்சல் பொது மேலாளர் (பணியாளர்), பி.எம்.ஜி, மேற்கு மண்டலம், கோவை - 641 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    புகாரில், தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிட வேண்டும்.

    பதிவுத் தபால், எம்.ஓ. வி.பி, காப்பீடு செய்யப்பட்ட கடிதம் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், முகவரி போன்றவை குறிப்பிட வேண்டும்.

    அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண் அல்லது பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விவரம் ஆகியவை குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai