Enable Javscript for better performance
இளம் வயது திருமணம்: சிறுமியை  மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இளம் வயது திருமணம்: சிறுமியை  மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 18th July 2013 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்காரப்பேட்டை அருகே இளம் வயது திருமணம் செய்து கொண்ட சிறுமி மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
     கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல், காந்திநகரைச் சேர்ந்தவர் தையலர் சிவக்குமார். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகள் ஜீவிதா (13). இந்த நிலையில், 13 வயதான தனது மகளுக்கு, சிவக்குமார் தனது தனது சகோதரியின் மகன் பூபாலனை இளம் வயது திருமணம் செய்து வைத்ததாகவும், மகளை மீட்டுத் தருமாறு, சிவக்குமாரின் மனைவி பழனியம்மாள் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் மனு அளித்தார்.
     இதுகுறித்து, விசாரணை நடத்த மாவட்ட சமூக நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
     இதன்படி, மாவட்ட சமூக நல அலுவலர் உமாமகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதில் சிறுமி ஜீவிதாவுக்கு இளம் வயது திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை மீட்டு காப்பாகத்தில் ஒப்படைத்தார். மேலும், திருமணம் செய்து வைத்த சிறுமியின் தந்தை மற்றும் திருமணம் செய்த இளைஞர் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத் துறை அலுவலர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai