Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் ஜூலை 21 முதல் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் ஜூலை 21 முதல் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

    By  கிருஷ்ணகிரி  |   Published on : 18th July 2013 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய, நகர அளவில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக, மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியம், 2 நகரங்களில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
     வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு வேப்பனப்பள்ளி ஒன்றியக் கூட்டம், வேப்பனப்பள்ளி சவுடேஸ்வரி திருமண மண்டபத்திலும், பிற்பகல் 12.30க்கு கிருஷ்ணகிரி ஒன்றியக் கூட்டம் கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலிலும், மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி நகரக் கூட்டம் பழையபேட்டை சுப்பிரமணி மஹாலிலும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு சூளகிரி கிழக்கு ஒன்றியக் கூட்டம், சூளகிரி எம்.எம். மஹால் திருமண மண்டபத்திலும், பிற்பகல் 12.30 மணிக்கு சூளகிரி மேற்கு ஒன்றியக் கூட்டம் பேரிகை பி.வி.ஆர் அண்டு எல்.எம்.ஆர் திருமண மஹாலிலும், மாலை 3 மணிக்கு ஒசூர் ஒன்றியக் கூட்டம் ஒசூர் மீரா மஹாலிலும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு மத்தூர் ஒன்றியக் கூட்டம், மத்தூர் தனம் திருமண மண்டபத்திலும், பிற்பகல் 2 மணிக்கு ஊத்தங்கரை ஒன்றியக் கூட்டம் ஊத்தங்கரை சிவாகமி திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
     11-ஆம் தேதி காலை 10 மணிக்கு காவேரிப்பட்டணம் ஒன்றியக் கூட்டம், காவேரிப்பட்டணம் பாலாஜி திருமண மண்டபத்திலும், பிற்பகல் 2 மணிக்கு பர்கூர் ஒன்றியக் கூட்டம் பர்கூர் துரைஸ் மஹாலிலும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒசூர் நகரக் கூட்டம், ஒசூர் கிரிஜா மஹாலிலும், பிற்பகல் 2 மணிக்கு தளி வடக்கு ஒன்றியக் கூட்டம் தளி வாசவி திருமண மண்டபத்திலும், 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தளி தெற்கு ஒன்றியக் கூட்டம் அஞ்செட்டி எஸ்.பி.டி. திருமண மண்டபத்திலும், பிற்பகல் 2 மணிக்கு கெலமங்கலம் ஒன்றியக் கூட்டம் ராயக்கோட்டை எஸ்.ஜி.ஆர். திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
     இந்தக் கூட்டங்களில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai