Enable Javscript for better performance
நகர்மன்ற உறுப்பினரை  பெண்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் நகராட்சி 13-வது வார்டு உறுப்பினரை அந்தப் பகுதி பெண்கள் குடிநீர்க் கேட்டு காலிக் குடங்களுடன் புதன்கிழமை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
     ஒசூர் நகராட்சி 13-வது வார்டு, சாந்தி நகரில் கடந்த ஒரு மாத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் வார்டு உறுப்பினர் இளையபெருமாளை முற்றுகையிட்டனர்.
     நகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராததால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். 13-வது வார்டில் இருந்து 14 வது வார்டுக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai