Enable Javscript for better performance
உணவு தானியத் திட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    உணவு தானியத் திட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தல்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 19th July 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பர்கூர் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் உணவு தானியத் திட்டத்தில் பயன்பெற தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, பர்கூர் வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர் ஸ்டீபன் ஜெயகுமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட

    செய்திக் குறிப்பு:

    உணவு தானிய இயக்கத் திட்டத்தின் கீழ் பயன்பெறவும், பண்ணைசார் பயிர் மேலாண்மைத் திட்டம் தயாரிக்கவும், விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உழவர் நண்பர்களிடம் தங்களுடைய அடிப்படை விவரங்கள் மற்றும் தங்கள் நிலத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், இனி வருங்காலங்களில் இணைய தளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டு வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மானியங்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், பர்கூர். தொலைபேசி எண்: 04343-265092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai