Enable Javscript for better performance
ஊத்தங்கரையில் வளர்ச்சிப் பணிகள்: ஆதிதிராவிடர் நல அரசு செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரையில் வளர்ச்சிப் பணிகள்: ஆதிதிராவிடர் நல அரசு செயலர் ஆய்வு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 19th July 2013 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு செயலர் கண்ணகி பாக்கியநாதன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள், மாணவிகள் விடுதிகளைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், மாணவ, மாணவிகளின் அறைகளில் மின் வசதி, கழிப்பறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், விடுதிக் காப்பாளரிடம் கடந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைக் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து, ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனை, காய்கறிகள் பதப்படுத்த ரூ.31.06 லட்சத்தில் கட்டப்படும் குளிர்பதனக் கிடங்கு, ரூ.1.20 கோடியில் கட்டப்படும் தானிய சேமிப்புக் கிடங்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது, குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடும் வகையில் சுவையாகவும், தரமாகவும் சமைக்க வேண்டும் என்றும், குழந்தைகளை சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சரியாக உணவு சமைக்காத சமையலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து, ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர், நடைபெற்ற விழாவில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 32 பேருக்கு தலா ரூ.15,200 வீதம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 400 மதிப்பில் காசோலைகளும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 10 பேருக்கு தலா ரூ.4,500 வீதம் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலியும், 18 மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகையாக தலா ரூ.1.20 லட்சம் வீதம் ரூ.21.60 லட்சத்தில் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    வேளாண்மைத் துறை சார்பில், தன்னார்வக் குழுக்களுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பில் பவர் டில்லர், விவசாயிகளுக்கு ரூ.22,500 மதிப்பில் உரம் மற்றும் நிலக்கடலை உள்பட மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 500 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இதில், ஆட்சியர் டி.பி.ராஜேஷ், ஒசூர் சார்- ஆட்சியர் பிரவீன் பி. நாயர், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மந்தராசலம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பெரியசாமி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சுந்தரேசன், மாவட்ட சமூக நல அலுவலர் உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புஷ்பலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai