Enable Javscript for better performance
ஒசூரில் லாரி மோதியதில் 8 பேர் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் மது போதையில் ஓட்டுநர் லாரியை ஓட்டி விபத்துக்குள்ளானதில், 13 வாகனங்கள் சேதமடைந்தன. 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

    பெங்களூரில் இருந்து திருப்பூர் அருகே உள்ள பல்லடத்திற்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஓட்டுநர் பழனி (45) கோழித் தீவனத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு ஓட்டி வந்தார். இந்த லாரி அத்திப்பள்ளியைக் கடந்து, ஒசூர் தர்கா ஏரி அருகே வந்துக் கொண்டிருந்தது.

    அப்போது, ஓட்டுநர் பழனி மது போதையிலிருந்ததால், அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்புறம் சென்ற புதிய கார், ஆட்டோ, 11 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி, மின்கம்பத்தின் மீது மோதி

    நின்றது . இந்த விபத்தில், 8 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    விபத்துக்குப் பின்பும், ஓட்டுநர் பழனிக்கு மது போதை தெளியவில்லை. அவரை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்த 8 பேரும் ஒசூர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஒசூர் நகரக் காவல் நிலையப் போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai