Enable Javscript for better performance
ஒசூரில் இளைஞர் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் தனியார் மருத்துவனையில் பணியில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     ஒசூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் தருமபுரி மாவட்டம், தண்டுகாரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் மகன் தேவராஜ் (22) வேலை செய்து வந்தார்.

     இவர் வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாக அவருடைய பெற்றோருக்கு அந்தத் தனியார் மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று பார்த்து பணியில் இருந்த தேவராஜ் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருள்தாஸ் இது குறித்து ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

     அதில், தேவராஜ் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

    முழு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

     இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்,  ஒசூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த தேவராஜ் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் விஷ ஊசி போட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே முழு விபரம் தெரியும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai