Enable Javscript for better performance
ஒசூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப்  பொருள்கள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்களால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

      தடை செய்யப்பட்ட புகையிலைப் உள்ளிட்ட  பொருள்கள் ஒசூர் நகரில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் வெள்ளிக்கிழமை நகரில் உள்ள காந்தி சாலை, நேத்தாஜி சாலை, போஸ் பஜார், பேருந்து நிலையம், வட்டாட்சியர்  அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் உள்ள பொது விற்பனை அங்காடி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், இது குறித்த எச்சரிக்கையும் விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டது.

     இந்தச் சோதனையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி, சேகர், ராஜசேகர்,

    லிங்கசாமி, கிரி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai