Enable Javscript for better performance
சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 20th July 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு கிருஷ்ணகிரி அணையிலுள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சான்றிதழுடன் கூடிய இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    இந்தப் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில் தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் இதுவரை 139 நபர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    18 முதல் 45 வயது வரையுள்ள தமிழில் எழுதப் படிக்க தெரிந்து, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் பயிற்சி பெறலாம்.

    சுய உதவிக் குழுக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படும். நூலகம், எல்சிடி புரஜக்டர் மூலம் விடியோவில் செயல்முறை விளக்கங்கள், இணையதளம் கொண்டு நவீன முறையில் பயிற்சி அனுபவங்களை பெறலாம்.

    மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகளும் கட்டணமில்லாமல் அளிக்கப்படும்.

    மாட்டுப்பண்ணை அமைத்தல், மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரித்தல், பட்டு வளர்ப்பு, ஆடு, தேனீ வளர்ப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்தல், பூச்செடிகள், பழ மரங்கள் பயிர் செய்தல், இருசக்கர வண்டி பழுது நீக்கம், இன்வெர்டர் மற்றும் யுபிஎஸ் பழுதுநீக்கம், அழகுக் கலைப் பயிற்சி, தையல் போன்ற 45 வகையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

    கணினிப் பயிற்சி, டிடிபி, ஆடையில் பூ வேலைபாடு செய்தல், மாட்டுப்பண்ணை, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் குழாய்கள், சுகாதாரப் பணிகள் செய்தல் ஆகிய பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன.

    பயிற்சியில் சேர பெயர், முகவரி, பயிற்சி மற்றும் தொலைபேசி அல்லது செல்போன் எண்ணுடன் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் ஒரு வெள்ளைத் தாள் அல்லது அஞ்சல் அட்டை மூலம் தெரியப்படுத்தலாம்.

    மேலும் விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி, சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கே.ஆர்.பி.அணை, கிருஷ்ணகிரி. தொலைபேசி எண்- 04343-240500, செல்போன் எண்- 94422 47921.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai