Enable Javscript for better performance
நீர் ஆதாரக் கோட்டம் அமைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் நீர் ஆதாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கச் செயலாளர் சென்னைய நாயுடு, தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

    கிருஷ்ணகிரி பகுதியில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு, கடந்த 1955-ஆம் ஆண்டு அப்போதைய அரசு நீர் ஆய்வுக் கோட்டம் அமைத்தது. அது சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    பின்னர், 1991-ஆம் ஆண்டு இந்த ஆய்வுக் கோட்டம் கிருஷ்ணா வாட்டர் கோட்டமாக அறிவிக்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் திட்டங்கள்- வட்டம் என்ற பெயரில் இந்தக் கோட்டம் இயங்கி வந்தது. பின்னர், இதுவும் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால், இந்தப் பகுதியில் நீராதாரம் குறித்த பணி செய்ய அனுமதி பெற சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீராதாரத்தை காக்கவும், மழைநீரை சேமிக்கவும் வகை செய்யும்படி இங்கு நீர் ஆதாரக் கோட்டம் மீண்டும் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai